கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினமும் 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 500 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், நேற்று யாரும் கொரோனா தொற்றுக்கு பலியாகவில்லை.
இந்நிலையில், கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் என தெரிவித்துள்ளார்.
–