பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் இப்பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24.06.2022