தீ விபத்துக்கு பின் விற்பனை சரிவு.. ஓலா-வின் எதிர்காலம் என்ன..?

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாகவே இருக்கும் நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எந்தச் சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இதன் எதிரொலியாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விற்பனையில் முன்னோடியாக இருந்த ஓலா நிறுவனத்தின் விற்பனை வேகமாகச் சரிந்து வருகிறது. இதனால் ஓலா நிறுவனத்தின் நிலை என்ன கேள்வி சந்தையில் உருவாகியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக ஓலா நிறுவனம் சமீபத்தின் தனது இரு சக்கர வாகனத்திற்குப் புதிய அப்டேட் கொடுத்தது, ஆயினும் விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது.

Tata Nexon EV: பைக் தான் தீ பிடிக்குதுன்னா.. இப்போ காரும் தீ பிடிக்கிறது..!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்

பாவிஷ் அகர்வால் தலைமையில் இயங்கி வரும் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டங்கள் தீ பிடித்து எரிந்த சம்பவத்தின் அதிர்வுகள் முழுமையாகத் தீரும் முன்பு ஓலா நிறுவனம் தனது பேமெண்ட் முறையில் முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது.

விற்பனை 20 சதவீதம் சரிவு

விற்பனை 20 சதவீதம் சரிவு

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனத்தை வாங்குவோருக்கு அத்தொகையைப் பல பகுதியாகப் பிரித்துப் பணம் செலுத்தும் சேவை அளித்து வந்தது, இதைத் தற்போது சிங்கிள் பேமெண்ட் சேவையாக மாற்றியுள்ளது. இந்தச் சேவை மாற்றத்திற்குப் பின்பு வெறும் 2 வாரத்தில் ஓலா நிறுவனத்தின் விற்பனை சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

2 வார மந்தம்
 

2 வார மந்தம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2 வாரமாக ஒரு நாளுக்கு 130 முதல் 200 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது, அதேவேளையில் வருடத்திற்கு 1 கோடி வாகனங்களைத் தயாரிக்க இலக்கை கொண்டு உள்ளது.

பேமெண்ட் முறை மாற்றம்

பேமெண்ட் முறை மாற்றம்

மே 28ஆம் தேதிக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோர் 4 தவணையாகப் பேமெண்ட் செலுத்தி வந்த நிலையில் தற்போது சிங்கிள் பேமெண்ட் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஒலா நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்பதகற்காக 10,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியும், 48 மணிநேரத்தில் டெலிவரி எனப் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

 வர்த்தகச் சரிவு

வர்த்தகச் சரிவு

இந்தப் புதிய தள்ளுபடி மூலம் ஓலா நிறுவனத்தின் வர்த்தகச் சரிவை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஓலா தினமும் 1000 வாகனங்களை விற்பனை செய்தாலும் வருடத்திற்கு 3,65,000 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும், அது ஓலா நிறுவனத்தின் 1 கோடி வாகனங்கள் டார்கெட்-க்கு மிகவும் பின்தங்கிய எண்ணிக்கையாக உள்ளது.

 முக்கியக் காரணம்

முக்கியக் காரணம்

ஓலா நிறுவனத்தின் விற்பனை சரிவுக்கு முக்கியக் காரணம் எலக்ட்ரிக் வாகனத்தின் தீ விபத்து முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது, இதேபோல் 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் டாடா நெர்சான் கார்-ம் தீப்பிடித்து எரிந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola Electric’s scooter sales fall after fire accident and payment change

Ola Electric’s scooter sales fall after fire accident and payment change தீ விபத்துக்குப் பின் விற்பனை சரிவு.. ஓலா-வின் எதிர்காலம் என்ன..?

Story first published: Friday, June 24, 2022, 17:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.