பெலகாவி : தொண்டையில் சிக்கிய சிறிய கிருஷ்ணர் சிலையை, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.பெலகாவி கே.எல்.இ. மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 45 வயது நபர், தொண்டை வலி என கூறி மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை, இ.என்.டி., டாக்டர்கள் பரிசீலித்து, எக்ஸ்ரே எடுக்குமாறு கூறினர். எக்ஸ்ரே அறிக்கையில், அவரது தொண்டையில், சிறிய கிருஷ்ணர் சிலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அவரிடம் கேட்டபோது, தினமும் வீட்டில் சுவாமி கும்பிட்ட பின், அங்கிருக்கும் தீர்த்தத்தை குடிப்பது வழக்கம். நான்கு நாட்களுக்கு முன், தீர்த்தம் குடிக்கும் போது, தீர்த்தத்தில் ஏற்கனவே இருந்த சிறிய கிருஷ்ணர் சிலையை விழுங்கியுள்ளார்.
அதன்பின், அவரால் சாப்பிட முடியவில்லை. அதை தொடர்ந்து அவரது தொண்டையில் வீக்கம் அதிகரித்ததால், மருத்துவமனைக்கு வந்தார். இதில், சிலையின் வலது கால், உணவு குழாயில் சிக்கிக் கொண்டிருந்தது. டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சிலையை வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement