சென்னை: தொழிநுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.