நாடு முழுவதும் ஜூன் 24 முதல் 26 வரை 2.5 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை 2.5 மணித்தியாலங்கள் வரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W) ஜூன் 24ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும், ஜூன் 25ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் எனவும் ஜூன் 26ஆம் தேதி அனைத்துப் பகுதிகளிலும் மின் துண்டிப்பு 2 மணி நேரமாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 300 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரி மூலம் இயங்கும் நுரைச்சோலை மின்நிலையம் மீண்டும் இயங்கும் வரை இலங்கையில் 2.5 மணி நேர மின்வெட்டு தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த புதன் கிழமை (22)தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் ஜூன் 24, 26 ஆகிய இரு தினங்களில் காலை 6.00 மணி முதல் காலை 8.00 மணி வரை 2 மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல் தேவைப்படின் Demand Managmet Schedule இருந்து 24ம் திகதி முதல் 26 ஜூன் 2022 மின் துண்டிப்பு பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.