நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தற்போதைய தலைவர் அமிதாப் காந்த்தின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக ஐயர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும்.  மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதிஆயோக் என்ற புதிய அமைப்பு உருவாக்கப் பட்டது. இந்த அமைப்பு  2015ம் ஆண்டு ஜ னவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் நிதி (NITI – National Institution for Transforming India) என்பதன் பொருளாகும்.
தற்போது, நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும், அமிதாப் கந்த் இருந்து வருகிறார்.  இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர், ஜூன் 30 உடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரியான பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பரமேஸ்வரன் ஐயர் உத்தரப்பிரதேச கேடரின் 1981-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. ஜூன் 30 அன்று அமிதாப் காந்த் ஓய்வு பெற்ற பிறகு, நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.