நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மேற்கு பிரதேச மக்கள் மத்தியில் வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு பாதுகாப்பினை பிரபலப்படுத்தும் விஷேட நிகழ்ச்சி நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது.
நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உணவின் அவசியம், காய்கறிகள் பயிரிட வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான விதைகள் மற்றும் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.