நாட்டின் சில பகுதிகளில் எரிபொருட்கள் 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு அதிக விலைக்கு, இரகசியமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட அரசியல்வாதி
இதேவேளை, அவசர பயணம் ஒன்றை மேற்கொள்ள எரிபொருள் கிடைக்காததால் கறுப்புச் சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோலை 950 ரூபாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில இரகசிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்பி பின்னர் எரிபொருள் குழாயை அகற்றி, எரிபொருளை போத்தல்களில் நிரப்பி இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர பயணங்களை மேற்கொள்வது சிரமமாக உள்ள காரணத்தினால் கறுப்பு சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.