மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆற்று வெள்ளப் பெருக்கினால் வயற்காணிகளில் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்துள்ளதனால் 5000 ஏக்கருக்கு மேற்ப்பட்ட வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியமை சுட்டிக்காட்டப்பட்டது. ஆற்றுவெள்ளத்தை அகற்றாவிடின் விவசாயிகள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என மாவட்ட விவசாயிகள்மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் சி.சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி சிவநேசதுரை சந்திரகாந்தன் உரிய அதிகாரிகis பணித்திருந்தார்.
இன்றைய தினம் (24) திகதி தேங்கியுள்ள நீரினை வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.