மும்பையில் வசாய் (Vasai) பகுதியில் சாலையில் சென்ற டாடா நெக்சன் மின்சார கார் திடீரென தீ பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வெளியானது.
இதுவரை மின் ஸ்கூட்டர்கள் ஆங்காங்கே தீப்பற்றி வந்த நிலையில், நாட்டின் முதல் சம்பவமாக மின்சார கார் தீ பற்றி எரிந்துள்ளது.
தீப்பற்றியதற்கான காரணம் முழுமையாக தெரிய வராத நிலையில், காரில் உள்ள வயர்களில் ஸார்ட் சர்கியூட் ஏற்பட்டு அதன் மூலம் தீப்பற்றி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பற்றியதற்கான காரணங்கள் ஆராய்வதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.