வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான நான்கு பேர் கொண்ட தூதுக்குழு, கொழும்பின் விரைவான பொருளாதார மீட்சிக்கு புதுடில்லி உதவத் தயாராக இருப்பதாக வியாழனன்று இலங்கைத் தலைமைக்கு உறுதியளித்தது.
அஜய் சேத், செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகம்; டாக்டர் வி ஆனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர்; மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே, வெளிவிவகார அமைச்சகம் (MEA) – ஆகிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொழும்பில் சந்தித்தனர்.
இலங்கையின் பொருளாதார மீட்புக்கான, இந்தியாவின் சமீபத்திய பொருளாதார உதவி 3.5 டாலர் பில்லியன் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நடந்த கூட்டங்களிலும், பிராந்திய மற்றும் பன்முக அமைப்புக்கள் உட்பட மற்ற மன்றங்களிலும் புது டில்லி கொழும்பை ஆதரித்தது.
இந்த சந்திப்பு குறித்து MEA செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி’ கூறுகையில், குவாத்ரா, சேத் மற்றும் நாகேஸ்வரன் ஆகியோர், “இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் தற்போதைய ஆதரவு” குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் “ஆக்கப்பூர்வமான விவாதங்களை” நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, முதலீடுகளை ஊக்குவித்தல், இணைப்பு மற்றும் பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் மூலம் இலங்கைக்கு விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக தூதுக்குழுவினர் அடிக்கோடிட்டுக் காட்டினர் என்று பாக்சி கூறினார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர் கமிஷன், பேச்சுவார்த்தை “வெளிப்படையான, சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில்” நடைபெற்றதாகக் கூறியது.
பிரதமர் நரேந்திர மோடியின்’ பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் வளர்ச்சி (SAGAR) மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையின் மூலம்’ அண்மையில் இலங்கைக்கு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதாக இந்திய தூதுக்குழு அடிக்கோடிட்டுக் காட்டியதாக அறிக்கை கூறியது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது, இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்புக்காக, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியத் தரப்பு நன்றி தெரிவித்தது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் தற்போதைய ஆதரவு குறித்து இரு தரப்பும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார மீட்சியை அடைவதற்கான முயற்சிகள் குறித்து இரு தரப்பும் ஆழமான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
“அப்போது, உள்கட்டமைப்பு, இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான பொருளாதார தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இலங்கை முதலீட்டு பங்கை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குவாத்ரா தனது இலங்கைப் பிரதிநிதியான அருணி விஜேவர்தனாவுடனும் ஒரு தனி சந்திப்பை நடத்தினார், அவர்கள் இராஜதந்திர ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கு நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.
பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, மனிதாபிமான உதவி, வளர்ச்சி ஒத்துழைப்பு, வணிக ஈடுபாடு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த சில வருடங்களாக இந்திய அரசாங்கம் மற்றும் மக்களின் நிலையான ஆதரவை இலங்கை தரப்பு பாராட்டியுள்ளது.
இந்தியாவால் வழங்கப்பட்ட வளர்ச்சி உதவி $5 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்று அது கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“