உலக நாடுகள் விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தின் பாதிப்பாலும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேளையில், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்திய பொருளாதாரம் உள்நாட்டில் நிலவும் பிரச்சனைகளாலும், சர்வதேச சந்தை நெருக்கடி காரணமாகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் அடுக்கடுக்காக இருக்கிறது.
இந்தியாவில் ரூ.4400 கோடி முதலீடு செய்யும் உலக வங்கி.. தமிழகத்தில் எவ்வளவு.. எதற்காக?
பொது நிதி கவலை
முன்னரே கணித்தபடி நடப்பு நிதியாண்டில் இந்தியா தனது பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வாய்ப்பில்லை என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தற்போதை நோக்கம், திட்டம் எல்லாம் பொது நிதியில் பெரும் சரிவைத் தடுக்கவும், கடந்த ஆண்டு நிலவரப்படி நிதி பற்றாக்குறையை வரம்பிற்குள் நிலை நிறுத்த வேண்டும் என்பது தான்.
கடினமான இலக்கு
கடந்த ஆண்டு 6.7% பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது 2022-23 நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆகும்.
இலக்கு மீறுவது உறுதி
பணவீக்க பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகளவில் செலவழிக்கப்பட்டு வருகிறது, சில இடத்தில் இழப்பையும் ஏற்றுக்கொண்டும் வருகிறது. இதனால் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இலக்கில் 30 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.30% வரை இழக்க நேரிடும்.
பணவீக்கம் முதல் மானியம் வரை
இந்தியாவில் தொடர்ந்து உயரும் பணவீக்கம், ஐந்து மாதங்களாக ரிசர்வ் வங்கியின் 6% உச்ச வரம்புக்கு மேல் சில்லறை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் 30 ஆண்டு உயர்வு.
எரிபொருள் வரிக் குறைப்பு மற்றும் வரிக் கட்டமைப்பு மாற்றங்கள் மூலம் மத்திய அரசுக்கு சுமார் $19.16 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியது.
இதேவேளையில் உர மானியங்கள் அதிகரித்து வருகின்றன, இதன் மூலம் தற்போதைய மதிப்பீடான ரூ.2.15 லட்சம் கோடியில் இருந்து ரூ.500-700 பில்லியன் அதிகரிக்கலாம்.
உள்ளார்ந்த ஆபத்து
இந்திய நிதி ஒழுக்கமின்மை இந்தியாவின் கடன் மதிப்பீடுகளையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் அதன் கடனையும் பாதிக்கலாம் இதனால் கடன் விகிதம் சுமார் 95 சதவீதம் வரையில் உயர வாய்ப்பு உள்ளது. இந்தியாவைப் போல் உள்ள மற்ற மாநிலங்களில் இது 60-70% ஆக இருக்கும் வேளையில் இந்தியாவின் அளவீடுகள் மிகவும் அதிகமாக உள்ளது.
பின்விளைவுகள்
மத்திய அரசு ஒருபக்கம் மக்களைப் பல விஷயங்கள் அடுத்தடுத்து பாதித்து வரும் நிலையில், பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் மந்தமாக இருக்கும் வேளையிலும் தற்போது இருக்கும் மந்தமான நிதி நிலை மற்றும் மோசமான பணவீக்கத்தால் பெரிய மாற்றங்களை அறிவிக்க முடியாமல் உள்ளது.
சில்வர் லைனிங்
இந்தியாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நடந்திருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஜூன் 16 வரையிலான நேரடி வரி வசூல் 45% மற்றும் மே மாதத்திற்குள் மறைமுக வரி வசூல் 30% அதிகரித்து ஒட்டுமொத்த வரி வசூல் பிரகாசமான இடமாக உள்ளது.
செலவு, வருவாய்
ஆனால், எதிர்வரும் செலவினங்களுக்கு ஏற்றவாறு வருவாய்கள் அதிகரிக்கவில்லை என்றால், மத்திய அரசு நவம்பர் மாதத்தில் புதிதாகக் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதனால் பட்ஜெட் பற்றாக்குறை இலக்கை அடைவதில் பெரும் சவால்களைச் சந்திக்க நேரிடம்.
Modi Govt aims to keep FY2023 fiscal deficit at last year level
Modi Govt aims to keep FY2023 fiscal deficit at last year level மோடி அரசுக்கு அடுக்கடுக்கான சவால்.. நவம்பர் மாதம் முக்கிய முடிவு..!