உக்ரைன் ரஷ்யா பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் இப்போதைக்கு முடியபோவதில்லை என்பதையே இவ்விரு நாடுகளின் போக்கு உணர்த்துகிறது.
ரஷ்யாவும், உக்ரைனும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் போர் புரிந்து வருகின்றன. இந்த நீயா நானா போட்டியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
பல அண்டை நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பினை காட்டும் விதமாக தடைகளை விதித்து வருகின்றன. பல நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பினை காட்டும் விதமாக ரஷ்யாவில் இருந்து தங்களது வணிகத்தினையே வெளியேற்றி வருகின்றன.
நிரந்தரமாக வெளியேற்றம்
அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் பிரபலமான காலணி நிறுவனமான நைக் (Nike), ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு தனது எதிர்ப்பினை காட்டும் விதமாக ரஷ்யாவில் உள்ள கடைகளை தற்காலிகமாக முன்னதாக நைக் மூடியது.
ஆன்லைன் சேவையும் கிடையாது?
ஆனால் பிரச்சனை தற்போது மிக தீவிரமாக சென்று கொண்டுள்ள நிலையில், அந்த கடைகளை மீண்டும் திறக்க போவதில்லை என தீர்க்கமாக தெரிவித்துள்ளது. அதேபோல ஆன்லைனில் நைக் சேவையினை இனி ரஷ்யாவில் பெற முடியாது என அறிவிர்த்துள்ளது. இது நைக் வாடிக்கையாளார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தமும் ரத்து?
ஏற்கனவே சமீபத்தில் ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தினையும் புதுபிக்கபோவதில்லை என்றும் நைக் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
உக்ரைன் ரஷ்யாவில் இருந்து மொத்தம் அதன் வருவாயில் 1% மட்டுமே இப்பகுதிகளில் இருந்து பெறுவதாக நைக் தெரிவித்துள்ளது. ஆக நைக்கின் இந்த நடவடிக்கையினால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியேறிய நிறுவனங்கள்
முன்னதாக ரஷ்யாவில் இருந்து மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ், இந்தியாவினை சேர்ந்த டாடா ஸ்டீல், இன்போசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் நைக் நிறுவனமும் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. நைக்கின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, அமெரிக்க பங்கு சந்தையில் நைக்கின் பங்கு விலையானது கிட்டதட்ட 1% அதிகரித்துள்ளது.
Nike exit its business operations in Russia
Nike, America’s leading footwear company, has announced its permanent exit from Russia.