கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
வன சரணலாயங்களை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.
மலை பகுதிகள் நிறைந்த வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கமான, எஸ்.எப்.ஐ. அமைப்பினர் கல்பெட்டாவில் உள்ள ராகுலின் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தினர்.