ரஷ்ய ராணுவ விமானத்தில் எற்பட்ட இயந்திர கோளாறினால் வானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் திடீரென தீப்பற்றி ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஐந்தாவது மாதத்தில் காலெடுத்து வைக்க தொடங்கி இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனிய பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று ரஷ்ய வான்பரப்பில் பறந்து கொண்டு இருந்த An IL-76 ரக ரஷ்ய ராணுவ விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
மேலும் இயந்திர கோளாறை தொடர்ந்து, வானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் தீப்பற்றியாதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரஷ்யாவின் மேற்குப் பகுதி நகராமான ரியாசானில் (Ryazan) விழுந்து நொருங்கியுள்ளது.
🇷🇺✈️#Russia – 20220624 – #Ryazan, Ryazan Oblast – reported around 06.02 am, IL-76 militaty plane crashes near Ryazan (1)
Comment: Ryazan is some 180 km southeast from Moscow pic.twitter.com/uXlmRAyXBw
— glosm eusec (@glosmeusec) June 24, 2022
இதுத் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலில், விமானத்தின் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்திற்கான காரணம் எனத் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விமானம் விழுந்து நொருங்கிய இடத்தில் ஏற்பட்ட பயங்கர தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\
The official cause of the incident in #Ryazan was said to be an engine malfunction.
There were 9 people on board: 3 were killed, 6 were injured and hospitalized. pic.twitter.com/UFZS2VBMbA
— NEXTA (@nexta_tv) June 24, 2022
கூடுதல் செய்திகளுக்கு: 27 முறையும் ஆமாம்…உக்ரைன், மால்டோவாவிற்கு வாழ்த்து சொன்ன ஜெர்மன் ஜனாதிபதி
மேலும் இந்த விமானத்தில் 9 பேர் வரை பயணித்த நிலையில் 4 பேர் வரை கொல்லப்பட்டு விட்டதாகவும், 5 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.