2030ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்குத் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், திருப்பெரும்புதூர், ஓசூரில் 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகத் தெரிவித்தார்.