பெங்களூரு: பெங்களூருவில் உள்ள காமாட்சிபாளையா போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் எம்.சிவண்ணா.
இவர் கடந்த 21-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஞானபாரதி சந்திப்பில் பணியில் ஈடுபட்டார். இந்த 6 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் 249 போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார்.
இதில் அதிகபட்சமாக கார் உரிமையாளர் ஒருவரிடம் கடந்த 6 மாதங்களில் நகரில் 36 இடங்களில் ‘நோ பார்க்கிங்’ விதிமுறைகளை மீறியதற்காக ரூ.36 ஆயிரம் அபராதமாக வசூலித்துள்ளார்.
இதுகுறித்து எம்.சிவண்ணா கூறுகையில், ”எனது வாழ்க்கையில் 12 வருட காவல்துறை அனுபவத்தில் முதல் முறையாக 6 மணி நேரத்துக்குள் ரூ.2.04 லட்சம் அபராதத்தை வசூலிப்பது இதுவே முதல்முறை” என்றார்.