மூன்றாம் தரப்பு லாகிஸ்டிக்ஸ் சேவை வழங்குனரான ஷேடோபாக்ஸ் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம், தேவைகேற்ப 75,000 டெலிவரி பார்ட்னர்களை ஜூலை இறுதிக்குள் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நீண்ட தூரம் பயணிக்க முடியாத ஆனால் பணம் சம்பாதிக்க அல்லது நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்பும் நபர்களை பணியமர்த்துவதற்கு நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த நிறுவனம் தமிழக்கத்திலும் 5000 பேருக்கான டெலிவரி பார்ட்னர்களுக்கான வேலைகளை உருவாக்கும் திட்டத்தினை அறிவித்திருந்தது.
டெலிவரி பார்ட்னர்கள்
ஷேடோபாக்ஸ் ஜூலை 2022 இறுதிக்குள் இந்தியா முழுவதும் 75,000 டெலிவரி பார்ட்னர்களை நியமிக்கும். இந்த ரைடர்கள் மாதம் 35,000 ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். அதே நேரத்தில் விபத்து மற்றும் 7.5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீட்டின் மூலம் பயனடையலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச வருவாய்க்கு உத்தரவாதம்
இந்த பணியானது நெகிழ்வான வேலை நேரம் மற்றும் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம் போன்ற பல நன்மைகளை வழங்கவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ரைடர்கள் தங்களது டெலிவரியினை பைக்குகள் அல்லது சைக்கிள் மூலம் செய்ய முடியும்.
எலக்ட்ரிக் வாகன வாடகை திட்டம்
ஒரு வேளை ரைடர்களுக்கு டெலிவரிக்கு சொந்த பைக் கிடைக்காவிட்டால், ரைடர்கள் எலக்ட்ரிக் வாகன வாடகை திட்டத்தையும் நிறுவனம் கொண்டுள்ளது. இது ரைடர்களுக்கு இது மிக பயனளிக்கும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
எங்களின் நோக்கம்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கிக் பொருளாதாரம் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. இது நாட்டின் இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகவும் மாறியுள்ளது. இது நம்பகமான வருமான ஆதாரவாகவும் மாறியுள்ளது. ஷேடோபாக்ஸ் நாடு முழுவதும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது எங்களது டெலிவரி சமூகத்தினை வலுபடுத்த உதவும் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மேற்கோளிட்டுள்ளார்.
பல லட்சம் டெலிவரி
ஷேடோபாக்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய டெலிவரி நிறுவனமாகும். தினசரி 900 நகரங்களில், 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியினை செய்து வருகின்றது. சுமார் 170 நிறுவனங்களுக்கு டெலிவரி சேவையினை கொடுத்து வருகின்றது.
Shadowfax tech plans to hire 75,000 delivery partners by July end
Shadowfox Technology Ltd a third-party logistics service provider, has announced plans to hire 75,000 delivery partners by the end of July.