பொறியல் பாடப்படிப்பில் குறிப்பிட்ட பாடப் பிரிவு பெண்களுக்கு சரிவாராது என்று பொதுவாக கூறப்படுகிறது. குறிப்பாக மெக்கானிக்கல், சிவில் எஞ்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்வு செய்யாலாமா என்று பல பெற்றோர்கள் யோசிப்பார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் ஆண்களுக்கு இதுதான் சரி வரும் என்றும் பெண்களுக்கு இது சரிவராது என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்க காலத்தில் மெக்கானிக்கல் பிரிவை பெண்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.
30 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்சாலை சூழல் அப்படி இருந்தது. அப்போது இருந்த தொழிச்சாலையில் ஒரு பெண்கள்கூட வேலை செய்யமாட்டார்கள். கடின உடல் உழைப்பு சார்ந்த வேலையாக இருந்தது. புகழ் பெற்ற நிறுவனங்கள்கூட பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருந்த காலம் இருந்தது. தற்போது இது மாறியிருக்கிறது. மெக்கானிக்கல் என்ற பிரிவு தற்போது மெக்கட்ரானிக்ஸ் ஆக மாறியிருக்கிறது. இதனால் வெறும் இயந்திரங்களை கொண்டு இயங்குவதாக தொழிச்சாலைகள் இன்று இல்லை. இதனால் பெண்களும் மேனுஃபேக்சர் என்ஜினியரிங் அதாவது தயாரிப்பு பொறியியல் பிரிவை தேர்வு செய்கிறார்கள்.
இரண்டாவது காரணம் இங்கு பெண்களுக்கு எல்லா துறைகளிலும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை தற்போது எல்லா நிறுவனங்களும் வைத்துள்ளன. தற்போது இசிஇ, கம்யூட்டர் சைன்ஸ், டிரிபிள் இ இதையெல்லாம் சர்க்யூட் கிளை பாடப்பிரிவு என்று சொல்வோம். இந்த பிரிவுகளில் அதிக பெண்கள் இருப்பார்கள்.
மெக்கானிக்கல், ஏரொனாடிக்ஸ் போன்ற பிரிவுகளில் பெண்கள் முன்பெல்லாம் படிக்கமாடார்கள் ஆனால் தற்போது அதை தேர்வு செய்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அச்சம் கொள்ளாமல் சிவில், மெக்கானிக்கல் பிரிவை பெண்கள் தேர்வு செய்வதை தடுக்காமல் இருக்க வேண்டும்.