தரையில் இருந்து செங்குத்தாக பாய்ந்து சென்று வானில் 25 முதல் 30 கிலோ மீட்டர் வரையிலான குறுகிய தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை, டிஆர்டிஒ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் சண்டிபூர் கடற்கரை அருகே நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகணை அழித்ததாகவும், அதிவேக வான் இலக்கைப் பிரதிபலிக்கும் விமானத்திற்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதாகவும் டிஆர்டிஒ தெரிவித்துள்ளது.