Tamil news today live : இந்தியா- 17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய  உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிறுத்தல். தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ 7,500 முதல் 12,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும்- போக்குவரத்துத்துறை உத்தரவு

உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று  ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.  பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது என்றும் அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடலூர் வெடி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

கடலூர், எம்.புதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.  

Live Updates
09:35 (IST) 24 Jun 2022
17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 17,336 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர்.13 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு 88,284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

08:15 (IST) 24 Jun 2022
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

08:10 (IST) 24 Jun 2022
திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்

திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்ய இருக்கிறார் . நண்பகல் 12:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

08:00 (IST) 24 Jun 2022
அக்னிபாத் திட்டம்; ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்

அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம். நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.