திருமண நிகழ்ச்சிகளில் பல வேடிக்கையான நிகழ்வுகள் நடப்பதுண்டு. வட மாநிலங்களில் நடைபெறும் திருமண விழாவென்றால் கேட்கவே வேண்டாம். வகை வகையான சடங்குகள் சம்பிரதாயங்கள் என கொண்டாடி தீர்த்திடுவார்கள். ஆனால் அந்த கொண்டாட்டங்கள் சில நேரங்களில் சுவாரஸ்யமான, வேடிக்கை சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.
அந்த வகையில், திருமண வரவேற்புக்கு குதிரையிலோ, காரிலோதான் மணமகன், மணப்பெண் பொதுவாக செல்வார்கள். ஆனால் மத்திய பிரதேசத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன் வித்தியாசமாக மணல் அள்ள பயன்படுத்தும் புல்டோசரில் வந்தது அரங்கேறியிருக்கிறது.
இது கடந்த செவ்வாய் (ஜூன் 21) அன்று மத்திய பிரதேசத்தின் betul மாவட்டத்தில் நடந்திருக்கிறது. பைன்ஸ்தேஹி தெஹ்சில் பகுதியில் உள்ள ஜல்லர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அன்குஷ் ஜெய்ஸ்வால். சிவில் இஞ்சினியராக பணியாற்றி வரும் அன்குஷ், தன்னுடைய திருமணம் மறக்கமுடியாத தருணமாக இருக்க வேண்டும் என எண்ணி, தன்னுடைய வேலையோடு தொடர்புபடுத்தி புல்டோசரை வரவேற்பு வாகனமாக பயன்படுத்தியிருக்கிறார்.
मध्यप्रदेश के बैतूल में बुलडोजर पर सवार होकर निकला दूल्हा, वीडियो सोशल मीडिया पर वायरल pic.twitter.com/mjBCd8Sh7L
— The Fact Factory. (@FactTheFactory) June 22, 2022
அதன்படி, அந்த புல்டோசரின் முன் புறத்தில் பூக்கள், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, அதன் மீது அமர்ந்து ஊர்வலமாக திருமண வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஊர்வலத்தின் போது புல்டோசரில் வசதியாகவே அமர்ந்திருந்தேன் என அன்குஷ் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.
இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, மோட்டார் வாகன சட்டத்தின் படி பொது போக்குவரத்திற்காக இருக்கும் புல்டோசனை வணிக ரீதியாக பயன்படுத்தியதற்கு புல்டோசரின் டிரைவருக்கு ரூ.5,000 அபராதம் விதித்திருக்கிறது மத்திய பிரதேச போலீஸ்.
ALSO READ:
‘லைஃபை தொலைச்சுராத குமாரு’ : ஓவர் லோடு பைக் ஓட்டிக்கு தெலங்கானா போலீஸ் சொன்ன அட்வைஸ்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM