Vivo Y21 Offer Price: Vivo Y21 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விவோ போனில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட், அமேசான் இந்தியாவில் இந்த போன் சலுகை விலையில் கிடைக்கிறது.
Xiaomi: உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் போன்; அறிமுகம் செய்யும் சியோமி!
விவோ ஒய்21 சலுகை விலை (Vivo Y21 Offer Price)
டெபிட் கார்டு EMI, வங்கி சலுகைகள் போன்றவையும் விவோ ஒய்21 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகின்றன. Vivo Y21 போனின் 64ஜிபி சேமிப்பு கொண்ட வேரியன்ட் விலை பிளிப்கார்ட்டில் ரூ.13,489 ஆக உள்ளது. SBI கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில், SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தி சுலப மாத் தவணைத் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. டெபிட் கார்ட் மாதத் தவணைத் திட்டத்தின் மூலம் ரூ.842 செலுத்தி போனை வாங்கலாம்.
இந்த போனை அமேசானில் இருந்து 13,285 ரூபாய்க்கு வாங்கலாம். கூடுதலாக Yes Bank கிரெடிட் கார்டு இஎம்ஐ மூலம் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் போனில் ரூ.9,200 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும்.
இந்த சலுகைகள் அனைத்தையும் பயன்படுத்தி போனை வெறும் ரூ.2,600 மட்டுமே செலுத்தி வாங்கலாம். இந்த விலையில் கிடைக்கும் சிறந்த போனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்
Facebook: பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க மார்க் சொன்ன 5 வழிகள்!
விவோ ஒய்21 அம்சங்கள் (Vivo Y21 Specifications)
Vivo Y21 ஆனது 6.5-இன்ச் HD + (720 × 1600 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ பி35 (MediaTek Helio P35) புராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
போனில் 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பகம் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக சேமிப்பகத்தை 512 ஜிபி வரை விரிவுபடுத்தலாம். புதிய விவோ ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, அதனுடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது.
Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!
போனின் முன்பக்கம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் உள்ளது. திரையில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
போனை இயக்க, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. USB Type-C போர்ட், டூயல் சிம் ஸ்லாட், 4G போன்ற இணைப்பு ஆதரவினையும் இந்த ஸ்மார்ட்போன் பெறுகிறது. போனில் வலதுபக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.