அக்னிபாத் திட்டத்தின் மூலம் விமானப் படையில் சேர முதல் நாளில் மூன்றாயிரத்து 800 வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு நடுவே அக்னிபாத் திட்டத்தில் விமான படைக்கு ஆட்சேர்பு பணி தொடங்கியது. தரைப்படைக்கு 40 ஆயிரம் வீரர்களும், விமான மற்றும் கடற்படைக்கு தலா மூன்றாயிரம் வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.