அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு |
நாட்டின் பிரதான பிரச்சினை
சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.
மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியினை நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.
எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பிலான பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர குறைவடையவில்லை. எரிபொருள் விநியோகத்தில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல் நிலைமை நாட்டின் பிரதான பிரச்சினையாக உள்ளது.
இதற்கு தீர்வுகாண அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் ஒக்டோபர் மாத காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனிதாபிமானச் செயல்! இலவசமாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் |
சர்வதேந நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்கும் போது எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது. எரிபொருள் வரிசைக்கு செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்கின்றன.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்தீர்மானங்களையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
ரணில் விக்ரமசிங்கவின் எண்ணம்
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டால் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுகிறார்.
அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்திடம் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
இருப்பினும் இதுவரை சாதகமான பதிலை அரசாங்கம் குறிப்பிடவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுகைக்கான வரிசை நீண்டு செல்கிறதே தவிர குறைவடையவில்லை என்றார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தயார் நிலையில் பொலிஸார் |