கருக்கலைப்பு குறித்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அமெரிக்க பெண்களின் வாழ்வும், ஆரோக்கியமும் கேள்விக் குறியாக மாறியுள்ளதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சோகமான நாள் எனக் கூறிய அதிபர் பைடன், அமெரிக்கா 150 ஆண்டுகள் பின்னோக்கி சென்றதாக தெரிவித்தார். 1973 ரோ அண்ட் வேட் வழக்கில் 50 ஆண்டுகால கருக்கலைப்பு சட்டப்பூர்வ உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாட்டின் முதல் மாகாணமாக மிஸ்ஸோரி கருக்கலைப்பை தடை செய்தது. கருக்கலைப்பு தடை செய்ய 13 மாகாணங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.