அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல் நிறைவேற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
“நடைமுறையில் சாத்தியமானதை நாங்கள் செய்கிறோம். ஒரு மசோதாவை உருவாக்குவதன் மூலம் நாம் மாயங்களின் பின்னால் ஓட வேண்டியதில்லை எனவும் நாட்டின் சூழ்நிலையில் இத்தகைய அனுபவம் நடைமுறைக்கு வராது என்பதால், அது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றும் ராஜபக்க்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.
நாடு தற்போது எதிர்நோக்கும் பல சவால்களை முறியடிக்கும் நீண்ட முன்னெடுப்பின் முதல் படியாக 21வது திருத்தம் அமையும் எனவும் கூறியுள்ளார். “நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் ஆர்வமாக உள்ளதாகவும், இது ஒரு அரசியல் வரலாற்றில் முக்கிய படியாகும்,” என்றும் அவர் கூறினார்.
SJB பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினா்கள் சட்டமூலத்தின் மீதான தீர்மானத்தில் உச்ச நீதிமன்றம் அதன் பல சரத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு இரண்டும் தேவைப்படும் என தெளிவாக கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “எங்களால் முடிந்ததை செய்துள்ளோம்,” என்றும் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.