சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடி மோசடி செய்தவர் கைதானார். தமிழக அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி வியாசர்பாடியை சேர்ந்த விஜய்குமார் (37) என்பவர் 14 லட்சம் பெற்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக, வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்த இந்திரா என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 31 பேரிடம் வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த விஜய்குமாரை கைது செய்தனர்.