ஆப்டிகல் இல்யூஷன்ஸ் நிறைய அர்த்தங்களுடன், நம் மூளையுடனும், மனதுடனும் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த ஒளியியல் மாயைகளைத் தீர்ப்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், ஏனெனில் அது அவர்களுக்கு ஏதோ பெரிதாக சாதித்த உணர்வைத் தருகிறது.
ஒளியியல் மாயைகள், ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன, அது யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அதை உடைக்க கூர்மையான தொலைநோக்கு பார்வை தேவை. உங்கள் மூளைக்கு பயிற்சி செய்ய இது ஒரு சிறந்த வழியாகும்.
ஒளியியல் மாயை’ வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம், மக்கள் அதை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கிறார்கள். மேலும் ஒவ்வொரு கண்ணோட்டமும் வாசகரைப் பற்றி எதையாவது வெளிப்படுத்துகிறது. நமது அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் நம் கண்கள் முதல் விஷயத்தை கவனிக்கின்றன, அதை நம் மூளை ஒப்புக்கொள்கிறது. இங்கு தான், ஆப்டிகல் இல்யூஷன் தந்திரம் செய்கிறது. அது உங்கள் மனதை ஏமாற்றி, உங்கள் கண்களை முட்டாளாக்குகிறது.
கீழே உள்ள படத்தைப் பார்த்து அதில் மறைந்திருக்கும் வார்த்தையைக் கண்டுபிடிக்கவும். இதுதான் உங்களுக்கான இன்றைய சவால்!
மறைந்திருக்கும் வார்த்தையைக் கண்டுபிடிக்க நாங்கள் கேட்கும் வரை இந்த படம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் இது சாதாரண படம் அல்ல, இதில் ஒரு ரகசிய வார்த்தை ஒளிந்துள்ளது.
பால் அகுலேவின் இந்த படம், சமூக ஊடகங்களில் வந்து இணையத்தில் புயலைக் கிளப்பியது. மக்களை தலையை சொறிய வைத்தது.
படத்தில் ஒரே மாதிரியான 3 முகங்கள் உள்ளன, அதில், ஒரே வார்த்தை மறைந்துள்ளது. வார்த்தையைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம், ஆனால் மறைந்திருக்கும் வார்த்தை நீங்கள் படிக்காத அல்லது கேட்காத ஒன்று அல்ல.
படத்தில் மறைந்துள்ள வார்த்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?
மீண்டும் படத்தைப் பாருங்கள். உங்களால் இன்னும் வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கிறோம்!
பதிலுக்கு கீழே பார்க்கவும்
அந்த ஆங்கில வார்த்தை Liar- முகத்தின் மூக்கு ‘L’ வடிவில் இருக்கிறது, மூக்கில் உள்ள துளை ‘I’ என்ற எழுத்தையும், மேல் உதடு மற்றும் கீழ் உதடு இணைந்து ‘A’ என்ற எழுத்தையும் உருவாக்குகின்றன. கன்னம் முதல் தொண்டை வரை உள்ள பகுதி ‘R’ என்ற எழுத்தை உருவாக்குகிறது.
மிகச் சிலரே இதைத் தீர்க்க முடிந்தது. இந்த வார்த்தையை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், இதை தீர்க்க முடிந்த சில மேதைகளில் நீங்களும் ஒருவர்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“