தற்போது பல பொருட்களை ரேட்டிங் செய்யும் முறை வந்து விட்டது என்பதும் அந்த ரேட்டிங்கை வைத்துதான் அந்த பொருளை வாங்குவதா? வேண்டாமா? என பொதுமக்கள் முடிவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கார்களை வாங்கும் போதும் இனி ரேட்டிங் பார்த்து வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய கார்களுக்கு ரேட்டிங் முறையை அறிமுகப்படுத்தும் வரைவு மசோதாவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து விரைவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!
வாகன பாதுகாப்பு
இந்தியாவில் தற்போது வாகன நிறுவனங்கள் AIS-145 என்ற முறையில்தான் வாகன பாதுகாப்பு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது என்பதும், பயணிகள் பாதுகாப்பு, ஏர் பேக்குகள், வேக வரம்பு, அலாரம் உள்ளிட்ட அம்சங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்களுக்கு புதிய ரேட்டிங்
இந்த நிலையில் உலக அளவில் கார்கள் பாதுகாப்பு மதிப்பீடுகளின் தரம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் தற்போது புதிய ரேட்டிங் முறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்திய கார்கள் ரேட்டிங்
இது குறித்து சாலை போக்குவரத்து கல்வி நிறுவனத்தின் தலைவர் ரோஹித் பல்லுஜா அவர்கள் கூறுகையில் இந்தியாவுக்கு கார் ரேட்டிங் அமைப்பு வரவேற்கத்தக்க கூடிய ஒரு நடவடிக்கை என்றும், இந்தியாவில் கார் வாங்குபவர்களுக்கு இந்த ரேட்டிங் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று கூறினார்.
நுகர்வோர்கள்
இந்தியாவுக்கான கார்கள் ரேட்டிங் முறை வாகனங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களை நுகர்வோருக்கு தெரிவிப்பது மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்திய கார்களின் ரேட்டிங்கை அனைவரும் தெரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
பாரத் என்சிஏபி
பாரத் என்சிஏபி என்ற இந்த புதிய கார்கள் ரேட்டிங் முறை அமலுக்கு வந்தால் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி வெளிநாட்டிலும் இந்திய கார்கள் ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ளலாம் என்று அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கூறியுள்ளார்.
சர்வதேச தரம்
சர்வதேச அளவில் இருக்கும் விபத்து பரிசோதனை ரேட்டிங் முறைகளுக்கு இணையாக இந்தியாவில் பாரத் என்சிஏபி முறை இருக்கும் என்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் இந்த ரேட்டிங்கில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்கள் கார்களின் தரத்தை வாடிக்கையாளர்களுக்கு தைரியமாக தெரியப்படுதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Bharat-NCAP car safety rating system: Minister Nitin Gadkari approved!
Bharat-NCAP car safety rating system: Minister Nitin Gadkari approved! | இனி இந்திய கார்களுக்கு பாதுகாப்பு ரேட்டிங்: மத்திய அமைச்சர் ஒப்புதல்