கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமையல் செய்வதற்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சோலார் அடுப்பை கண்டுபிடித்து உள்ளது என்பதும் இதன் மூலம் கேஸ் சிலிண்டர் தேவை இனி இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்
இந்த சோலார் அடுப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விரைவில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சூரிய அடுப்பை அறிமுகம் செய்து உள்ளது என்பதும் இந்த அடுப்பு சமையலறைக்கு உள்ளேயே வைத்து சமைக்கும் வகையிலான தொழில்நுட்பம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்ய நுாதன்
‘சூர்ய நுாதன்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த அடுப்பு சோலார் குக்கர் போன்றது அல்ல என்றும் இதை சூரிய ஒளிக்கு கீழே வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.
போட்டோவோல்டிக் பேனல்
பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த சூரிய ஒளி அடுப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வீட்டின் வெளியே அல்லது கூரையின் மீது வைக்கப்பட்டிருக்கும் ‘போட்டோவோல்டிக் பேனல்’ பேனல் என்ற கருவி மூலம் சூரிய ஒளி அடுப்புகள் செயல்படுகின்றன என்றும் இந்த பேனல் மூலம் சூரிய ஒளி எரிசக்தியாக மாற்றப்பட்டு அடுப்பில் இருக்கும் உணவுப்பொருள் சூடாகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்திலும் சமைக்கலாம்
சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் கூட இந்த அடுப்பின் மூலம் உணவை சமைக்க முடியும் என்றும் தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இந்த அடுப்பு விரைவில் வணிகரீதியாக தயாரிக்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
விலை என்ன?
முதல் கட்டமாக சூரிய ஒளி அடுப்பு விலை 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், வருங்காலத்தில் அதிக அளவிலான எண்ணிக்கையில் சூரிய அடுப்புகள் தயாரிக்கும் போது சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யலாம் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு
இந்த அடுப்புக்கு எந்தவித பராமரிப்பும் தேவையில்லை என்றும் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்றும் மிகவும் பாதுகாப்பானது என்றும் இந்த அடுப்பை சமையலுக்கு முழுமையாக பயன்படுத்தலாம் என்றும் ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. எந்த உணவு பொருளையும் வேகவைத்தல், வறுத்தல், உள்பட அனைத்தையும் செய்து கொள்ளலாம் என்றும், ஒருவேளை மேகமூட்டம் காரணமாக சூரிய ஒளி இல்லாமல் இருந்தால் மின்சாரத்தின் மூலம் இந்த அடுப்பை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர்
ஒரு கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் ஒரே ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சூரிய அடுப்பை வாங்கினால் நிரந்தரமாக எந்தவித செலவுமின்றி உணவு சமைத்து கொள்ளும் வசதி விரைவில் வர உள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Indian Oil Corporation Introduces new solar Stove for cooking
Indian Oil Corporation Introduces new solar Stove for cooking | இனி சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் தேவையில்லை: ஐ.ஓ.சி அறிமுகப்படுத்தும் சூரிய அடுப்பு!