உலகின் தலைசிறந்த தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரிகள் அதாவது சி.எம்.ஓ, குறித்த பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அதில் முதல் 10 இடங்களில் டாடா குழுமத்தின் சி.எம்.ஓ ஹரிஷ் பட் அவர்களின் பெயர் உள்ளது.
இலங்கை முழுவதும் 2 வாரம் ஷட்டவுன்.. எதற்காக தெரியுமா..?!
இவரது பெயர் போர்ப்ஸ் நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது இந்தியாவுக்கே பெருமை தரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ப்ஸ் சி.எம்.ஓ பட்டியல்
போர்ப்ஸ் நிறுவனம் 2022ஆம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த சி.எம்.ஓ,க்கள் பட்டியலை நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்தியர் ஹரிஷ் பட் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.
டாடாவுக்கு 9வது இடம்
இந்த பட்டியலில் 9வது இடத்தில் டாடாவின் சி.எம்.ஓ ஹரிஷ் பட் அவர்கள் உள்ளார். மேலும் முதல் 50 இடங்களில் உள்ள மற்ற இரண்டு ஆசிய ஆசிய சி.எம்.ஓ,க்கள் என்றால் அலிபாபா மற்றும் ஹூண்டாய் நிறு வனங்களின் சி.எம்.ஓ,க்கள் என்பதும் அலிபாபா நிறுவனத்தின் சி.எம்.ஓ, 15வது இடத்திலும் ஹூண்டாய் நிறுவனத்தின் சி.எம்.ஓ, 35 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிஷ் பட்
டாடாவின் ஹரிஷ் பட் குறித்து போர்ப்ஸ் நிறுவனம் குறிப்பிடுகையில், ’30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் டாடா என்ற இந்தியக் குழுமத்தின் பிராண்ட் பாதுகாவலராக, டாடா பிராண்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஊடகங்கள் மற்றும் சந்தைகளில் வெளிப்படுத்தும் நபராக ஹரிஷ் பட் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய முடிவுகள்
டாடாவின் வரலாற்றில் பல முக்கிய முடிவுகளை எடுத்தவர் என்றும், டாடாவின் எதிர்கால திட்டங்களில் இவர் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தைப்படுத்துதல்
மேலும் வாடிக்கையாளர் மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட சந்தைப்படுத்துதலுக்கான குழுவின் மாற்றத்தின் முக்கிய பகுதியாக இருந்தார் என்றும் ஹரிஷ் பட் அவர்களின் அணுகுமுறை என்பது, ‘நீங்கள் யாரை சந்தைப்படுத்துகிறீர்களோ அவர்களின் கண்களால் எதிர்காலத்தைப் பார்க்கும் திறன் உடையவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாப் 10 சி.எம்.ஓ பட்டியல்
இந்த நிலையில் போர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செல்வாக்குமிக்க மக்களில் முதல் 10 இடங்களில் பிடித்த சி.எம்.ஓக்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
1. டாரா டிரெஸ்டெர்: பெல்டான் இண்ட்ராக்டிவ் சி.எம்.ஓ
2. வில்லியம் ஒயிட்: வால்மார்ட் சி.எம்.ஓ
3. ஃபெர்னாண்டோ மெக்காடோ: ஆக்டிவேஷன் பிஸார்ட் சி.எம்.ஓ
4. கிரெக் ஜோஸ்வயக்: ஆப்பிள் சி.எம்.ஓ
5. மோர்கன் ஃபிளாட்லெ: மெக்டொனால்ட் சி.எம்.ஓ
6. சாரா பிராங்க்ளின்: சேல்ஸ்ஃபோர்ஸ் சி.எம்.ஓ
7. மானுவல் அராயோ: கோகோ கோலா சி.எம்.ஓ
8. பெட்டினா ஃபெட்சர்: மெர்சிடெஸ் பென்ஸ் சி.எம்.ஓ
9. ஹரிஷ் பட்: டாடா குரூப் சி.எம்.ஓ
10. அலெக்ஸ் ஸ்லட்ஸ்: மெட்டா சி.எம்.ஓ
Forbes list of Top Ten CMOs: Tata Harish Bhat in 9th place
Forbes list of Top Ten CMOs: Tata Harish Bhat in 9th place | உலகின் தலைசிறந்த சி.எம்.ஓ பட்டியல்.. டாடா குழுமம் சி.எம்.ஓவுக்கு எந்த இடம் தெரியுமா?