வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுடன் எரிசக்தி, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, சுற்றுச்சூழல் மற்றும் ஜனநாயகம் குறித்து கருத்துகளை பரிமாறி கொள்ள உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜெர்மனியின் ஸ்க்லாஸ் எல்மவு பகுதியில் ஜூன் 26 மற்றும் 27 ல் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ் அழைப்பின் பேரில் மோடி பங்கேற்க இன்று அங்கு செல்ல உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மனிதகுலத்தை பாதிக்கும் முக்கியமான சர்வதேச பிரச்னைகளில் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தெற்கு ஆப்ரிக்காவை ஜி7 மாநாட்டிற்கு ஜெர்மனி அழைத்துள்ளது.
இந்த மாநாட்டின் போது, ஜி7 நாடுகள், ஜி7 கூட்டாளி நாடுகளுடன் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத தடுப்பு, ஜனநாயகம் குறித்து கருத்துகளை பரிமாற உள்ளேன். மாநாட்டின் இடையே, ஜி7 நாட்டு தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தாளியாக கலந்து கொள்ளும் நாட்டு தலைவர்களையும் சந்திக்க உள்ளேன்.
கடந்த மாதம் இந்தியா ஜெர்மனி இடையிலானா ஆக்கப்பூர்வமான ஆலோசனைக்கு பிறகு மீண்டும் சான்சிலர் ஸ்கால்ஜ் -ஐயும், ஐரோப்பாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்திக்க ஆவர்மாக உள்ளேன்.
இந்தியா திரும்பி வரும் வழியில் அபுதாபியில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பிஜ் ஜாயத் அல் நயானை சந்தித்து, சமீபத்தில் காலமான ஷேக் கலிபா பின் ஜாயத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.
Advertisement