ஓபிஎஸ்சுக்கு ஆளுநர் பதவி.. ஆனா 2 கண்டிஷன்.. டெல்லி கொடுத்த ஆஃபர்..!?

டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதன்பின் பிரதமர் மோடியை சந்திக்க அவர் முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் பிரதமர் மோடி தரப்பு இவருக்கு நேரம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் சிலரை மட்டும் ஓபிஎஸ் சந்தித்து பேசி இருக்கிறார். டெல்லியில் ஒரு முக்கிய பாஜக புள்ளியையும் அவர் சந்தித்து உள்ளார்.

இதில் பாஜக பெரிதாக மத்தியசம் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஓரளவிற்கு சமாதானம் செய்ய முயல்கிறோம்.. முடிந்த அளவு மட்டுமே சரி பண்ணலாம் என்று மட்டுமே டெல்லி மேம்போக்காக கூறி உள்ளதாம்.

ஆனால், வேறு ஒரு ஆஃபரை டெல்லி இவருக்கு வழங்கி இருக்கிறதாம். அரசியலில் நீங்கள் அதீத அனுபவம் கொண்டவர். நீங்கள் ஏன் ஆளுநர் ஆக கூடாது..? மற்ற மாநிலங்களில் ஆளுநராக உயர் பதவியில் இருக்கலாம்.

விரைவில் ஆளுநர்களை நாடு முழுக்க பல மாநிலங்களில் கூட மாற்ற இருக்கிறோம். தெலுங்கானாவில் கூட மாற்ற வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஏன் ஆளுநர் ஆக கூடாது என்று டெல்லி தரப்பு அவரிடம் ஆஃபர் கொடுத்துள்ளதாம்.

அதோடு, இரண்டு கண்டிஷன்களையும் கொடுத்துள்ளதாம். அதிமுக விவகாரத்தில் நீங்கள் ஆளுநர் ஆன பின் கருத்து சொல்ல கூடாது. அதிமுகவில் இப்போது உங்களுக்கு ஆதரவு இல்லை. அதனால் நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்பது போல பேசி இருக்கிறதாம்.

இரண்டாவது கண்டிஷன், உங்கள் மகன்கள், தேவர் சமூகத்தை சேர்ந்த உங்கள் ஆதரவாளர்கள் எங்கள் கட்சியில் இணைய வேண்டும். அவர்களுக்கான பதவி குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறி இருக்கிறதாம் டெல்லி.

ஆனால், ஓபிஎஸ் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளுநர் பதவி ஆஃபர் என்பதை வெறும் ஐடியா போலவே கொடுத்துள்ளனர். அதனால் அதை ஓபிஎஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இப்போதைக்கு ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகும் எண்ணம் கிடையாது. அதிமுகவில் இன்னும் எனக்கு ஆதரவு இருக்கிறது என்று பாஜக தரப்பிடம் ஓபிஎஸ் தெரிவித்து இருக்கிறாராம். இன்று சென்னை வரும் அவர் முக்கியமான சில ஆலோசனைகளை செய்ய இருக்கிறாராம்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.