ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை தனது நெஞ்சுப் பகுதியில் வைத்து கடத்தி வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கப் பிரிவினரின் தகவல்
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு – வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இந்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 650 கிராம் எடையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் கழுத்தணிகள், மோதிரங்கள் போன்ற காணப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.