கையிருப்பை அதிகரிக்கும் வகையில் நிகழாண்டின் மே இறுதி வரையில் 52 ஆயிரத்து 460 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சக அதிகாரி, வரத்து குறைந்த நேரத்தில் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வெங்காயத்தின் கையிருப்பை அரசு அதிக அளவில் பராமரித்து வருகிறது என்றார்.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் மூலமாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறிய அவர், 2022ஆம் ஆண்டு ராபி பருவத்தில் மட்டும் இரண்டரை லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.