கோவோவாக்ஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு பரிந்துரை| Dinamalar

புதுடில்லி: சீரம் இந்தியா நிறுவனத்தின், ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசியை 7 – 11 வயதினருக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதிக்கு மத்திய மருந்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது.சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை 7 – 11 வயதினருக்கு செலுத்த அனுமதி அளிக்குமாறு, அந்நிறுவனம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இதை பரீசீலணை செய்த மத்திய மருந்து ஆணையம், அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்க பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.