மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் 24 திகதி மட்டக்களப்பு சதோச விற்பனை நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மோற்கொண்டார்.
இதன்போது கையிருப்பிலுள்ள பொருட்கள், பற்றாக்குறையாக உள்ள பொருட்கள் விலைகள் என்பவற்றை கேட்டறிந்துகொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் பற்றாக்குறையாக உள்ள பொருட்களை உடன் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மட்டக்களப்பு மக்களின் நன்மை கருதி உடனடி நடவடிக்கைகளை எடுத்துவரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.