உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீரிழிவு – ஒரு நாள்பட்ட, வளர்சிதை மாற்ற நோய் – இந்தியாவில் 20 மற்றும் 70 வயதுக்குட்பட்டவர்களில் 8.7 சதவீத நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டில் வளர்ந்து வரும் ஒரு சவாலாக உள்ளது
இந்த நிலை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது, இது சிகிச்சையளிக்கா விட்டால், கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் பல உடல் பாகங்களை பாதிக்கலாம்.
எனவே, நீரிழிவு அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தை நிலையில் உள்ளவர்கள், குறிப்பாக அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டவர்கள் சில உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும் அல்லது கட்டுப்படுத்தவும், அவர்களின் எடையைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா?
பலாப்பழத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ரிபோஃப்ளேவின், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. இது 100ல் சுமார் 50-60 நடுத்தர கிளைசெமிக் குறியீட்டை (GI) கொண்டுள்ளது என்று மும்பை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ஜினல் படேல் கூறினார்.
“ஆனால், நீரிழிவு நோயாளிகள், குறைந்த கிளைசெமிக் கொண்ட, சமைக்காத பச்சை பலாப்பழத்தைக் உட்கொள்ள வேண்டும், இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும். கூடுதலாக, இது குறைவான கலோரிகளையும் கொண்டுள்ளது, ”என்று அவர் indianexpress.com இடம் கூறினார்.
இருப்பினும், நிபுணர் அதை அதிகளவில் சாப்பிடுவதற்கு எதிராக எச்சரித்தார். “நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை’ பச்சையாக அளவோடு சாப்பிட வேண்டும். சுமார் 75 கிராம், பலாப்பழத்தில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது, இது உடலின் தினசரி தேவையை பூர்த்தி செய்ய உதவும் – இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற அளவாக அமைகிறது.
“சமைத்த வகையுடன் ஒப்பிடும்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சை பலாப்பழம் ஒரு சிறந்த தேர்வாகும், அதில் குறைந்த சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் ஒருவர் சாப்பிட்ட பிறகு , சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
பலாப்பழத்தை யார் சாப்பிடக்கூடாது?
பலாப்பழம் சிலருக்கு, குறிப்பாக பிர்ச் மகரந்தத்திற்கு (birch pollen) ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அழற்சி மற்றும் அசௌகரியங்களைத் தூண்டும். “உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், நீங்கள் பலாப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று ஜினல் அறிவுறுத்தினார்.
இரத்த உறைதல் பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது இரத்தத்தில் உறைதல் அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் ஒருவர் பலாப்பழத்தை உட்கொள்ளக்கூடாது. “மேலும், உங்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் அதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் பொட்டாசியத்தை உருவாக்குகிறது, இது ஹைபர்கேமியா என்ற நிலைக்கு வழிவகுக்கிறது,” என்று மருத்துவர் ஜினல் அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“