#சற்றுமுன் || உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு.! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கு அடிக்க போகும் அதிர்ஷ்டம்.!

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலத்தில் விட வேண்டுமென, பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நரசிங்க மூர்த்தி என்பவர், உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம், முதன்மை உயிர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவர்களுடைய தண்டனை காலங்கள் முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கில் அவர்களிடம் இருந்து 27 வகையான 15 ஆயிரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புடவைகள், 750 ஜோடி காலனிகள் அடங்கும்.

இந்த பொருட்கள் எல்லாம் தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பொருட்கள் தொடர்பாக RTI ஆர்வலர் நரசிங்க மூர்த்தி என்பவர், உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம், முதன்மை உயிர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “இந்தப் பொருட்களையெல்லாம் பொதுமக்களின் ஏலத்துக்கு கொண்டு வரவேண்டும். இந்த பொருட்கள் இந்த பொருட்களை ஏலத்துக்கு கொண்டு வரும்பொழுது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்கள் கற்பனைக்கு எட்டாத தொகைக்கு ஏலம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த தொகையை மாநில அரசின் கருவூலத்திற்கு கொண்டு வரலாம்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.