பெலகாவி, : தனக்கு பில்லி, சூனியம் வைத்தவர்களை தண்டித்தால், 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவதாக, எல்லம்மா தேவி உண்டியலில், பக்தர் ஒருவர் கடிதம் எழுதி போட்டுள்ளார்.பெலகாவி சவதத்தியில், வரலாற்று பிரசித்தி பெற்ற எல்லம்மா கோவில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இக்கோவிலுக்கு வருகின்றனர்.
தங்களின் வேண்டுதல்களை எழுதி, உண்டியலில் போட்டால், அம்மன் நிறைவேற்றுவார் என்பது, மக்களின் நம்பிக்கை. எனவே காணிக்கையுடன், கடிதங்களையும் பக்தர்கள் போடுவர்.அதுபோன்று போடப்பட்ட கடிதங்கள், நேற்று உண்டியல் திறந்த போது பார்க்கப்பட்டது. பக்தர் ஒருவர், ‘எனக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்துள்ளனர். இதனால், தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளேன்; கடன் தொல்லையும் அதிகரிக்கிறது. எனக்கு கெடுதல் செய்தவர்களை தண்டித்தால், 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவேன்’ என, வேண்டியுள்ளார்.மற்றொரு பக்தர், ‘எனக்கு ஆன்லைன் கேம்ஸ் பழக்கம் உள்ளது. இதுவரை நான் இழந்த பணத்தை, திரும்ப கிடைக்க செய். மீண்டும் என் மனம், ஆன்லைன் கேம்களை நாடாமல் பார்த்துக் கொள்’ என, கோரியுள்ளார்.
Advertisement