கர்நாடகாவில் சாலையில் வீசப்பட்ட பிறக்காத குழந்தைகளின் உடல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெலகாவி மாவட்டத்தில் உள்ள மூடலாகி (Mudalagi) நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஒரு கழிவுநீர் கால்வாய் பாலத்தின் கீழே 5 பிளாஸ்டிக் டப்பாக்களில் சிசுக்கள் அடைக்கப்பட்டு கிடந்தன. அந்த டப்பாக்களில் 7 சிசுக்களின் பிணம் இருந்தது தெரியவந்தது.
கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், சிசுக்களின் உடல்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வீசியது யார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.