சிவசேனா தொண்டர்கள் வீதியில் இறங்கினால் தெருக்கள் தீப்பற்றி எரியும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரிக் கடிதம் எழுதியுள்ளது பற்றி சஞ்சய் ராவத் கருத்துத் தெரிவித்தார்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும், அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்க முடியாது என்றும் கூறினார்.