சென்னையில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு.!

சென்னையில் மரம் சாய்ந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்ததில் வங்கிப் பெண் மேலாளர்  உயிரிழந்தார்.

போரூரைச் சேர்ந்த வாணி கபிலன் என்பவர் கேகே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். வங்கிப் பணிகளை முடித்து விட்டு தனது சகோதரி எழிலரசியுடன் அவர் புறப்பட்டார்.

வங்கியில் இருந்து 100அடி தூரம் சென்ற நிலையில் சாலையின் இடதுபுறம் இருந்த பெரிய மரம் கார்மீது விழுந்ததில் வாணி சம்பவ இடத்திலேயே பலியானார். கார்ஓட்டுநரும், எழிலரசியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் வடிகால்வாய் பணிக்காக  6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியதால், மரத்தின் வேர் பகுதி துண்டிக்கப்பட்டு சாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.