இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தவும் கடந்த 2 வருடமாகப் பல நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தது.
3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்
இதற்கிடையில் ஐபிஓ வெளியிட்டு, அதன் மூலம் ஏற்பட்ட சரிவை சமாளிக்கவும் போராடி வரும் நிலையில் வர்த்தக விரிவாக்கத்தில் குறியாய் இருந்தது.
தீபேந்தர் கோயல்
இந்தத் தேடலில் தீபேந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனம் நீண்ட காலமாகவே க்ரோபர்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து வந்த நிலையில், க்ரோபர்ஸ் தனது பெயரை Blinkit என மாற்றி வர்த்தகம் செய்தாலும் நிதிநெருக்கடியில் சிக்கியது.
முதல் முதலீடு
இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி முதலீடு செய்து குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளைக் கைப்பற்றிய சோமேட்டோ தொடர்ந்து அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றி மொத்தமாகக் கைப்பற்றும் முடிவுக்கு வந்தது.
Blinkit நிறுவனம்
Blinkit நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றுவதற்கு இறுதியான முடிவை எடுக்கச் சோமேட்டோ நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டி இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை சோமேட்டோ நிர்வாகக் குழு கூடியது.
4,447 கோடி ரூபாய்
இக்கூட்டத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குவிக் டெலிவரி சேவை பிரிவில் பெரிய அளவில் நுழையவும், ஏற்கனவே இருக்கும் லட்சக்கணக்கான சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்குப் புதிய சேவைகளை அளிக்கவும் முன்னாள் க்ரோபர்ஸ் இன்நாள் Blinkit நிறுவனத்தைச் சுமார் 4,447 கோடி ரூபாய் தொகைக்கு அனைத்து பங்குகளையும் கைப்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
1 பில்லியன் டாலர் மதிப்பீடு
சில மாதங்களுக்கு முன்பு Blinkit நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடந்த போது சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது Blinkit நிறுவனத்தை 700 முதல் 750 மில்லியன் டாலர் அளவில் மட்டுமே மதிப்பிடப்பட்டு உள்ளது.
யூனிகார்ன்
Blinkit நிறுவனம் கடந்த வருடம் சோமேட்டோ, டைகர் குளோபல் நிறுவனத்தின் தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் 120 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டி 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் Blinkit யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது, ஆனால் எப்போது 700 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் சோமேட்டோ கைப்பற்றியுள்ளது.
சோமேட்டோ – Blinkit ஒப்பந்தம்
சோமேட்டோ – Blinkit ஒப்பந்தம் மூலம் Blinkit நிறுவன முதலீட்டாளர்கள் சோமேட்டோ-வின் 7 சதவீத பங்குகளை 70.76 ரூபாய் விலையில் பெறுவார்கள் எனத் தெரிகிறது. இதோடு இந்தக் கைப்பற்றல் ஒப்பந்தத்திற்கு முன்பாகவே சோமேட்டோ பிளிங்க்இட் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளைத் தனது முந்தைய முதலீட்டின் வாயிலாகக் கைப்பற்றியிருந்தது.
zomato acquires blinkit for Rs 4,447cr in an all-stock deal; Zomato’s board approved
zomato acquires blinkit for Rs 4,447cr in an all-stock deal; Zomato’s board approved சோமேட்டோ தட்டில் புதிய உணவு.. விலை தான் கொஞ்சம் காஸ்ட்லி..!