பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான இழப்பீட்டுச் செஸ் தொகையை மார்ச் 2026 வரை நீட்டித்துள்ளது.
3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்
இதோடு இந்த இழப்பீட்டு நீட்டிப்பு மாநில அரசுகளுக்கானது அல்ல என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு
ஜிஎஸ்டி இழப்பீட்டுக் கட்டணத்தின் விரிவாக்கம் மூலம் மாநிலங்களுக்கு வாக்குறுதியாக்கப்பட்டது போல் மாநிலங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இந்த இழப்பீடு நீட்டிப்பு சாத்தியமாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 (15 இன் 2017) பிரிவு 8 உடன் பிரிவு 12 இன் துணைப்பிரிவு (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஏற்றுச் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான இழப்பீட்டுத் தொகையை மார்ச் 2026 வரை நீட்டிக்கும் விதியை உருவாக்குகிறது என்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
கடன்களுக்கான இழப்பீடு
மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்த முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் வகையில் நீட்டிப்பு உத்தரவிடப்பட்டது. ஜிஎஸ்டி வரியை நீட்டிப்பது 2022 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான இழப்பீடுகளை மாநிலங்களுக்கு வழங்குவதற்கும் உதவும்.
2 வருடம்
சில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரியானது, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மாநிலங்கள் வாங்கிய கடன்கள் மற்றும் செலுத்தப்பட்ட இழப்பீட்டு நிலுவைத் தொகையை ஈடுசெய்யும் வகையில் ஏற்கனவே மார்ச் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
14% ஜிஎஸ்டி வருவாய்
இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நடவடிக்கையின் கீழ் மாநிலங்களின் வரிகளை நீக்கி 2017ல் ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது ஜூன் 30, 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு 14% ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியை மத்திய அரசு இழப்பீடாக ஏற்படும் பற்றாக்குறையை இழப்பீடு செஸ் நிதியால் ஈடுசெய்யப்படும் என அளிக்க உறுதியளித்தது.
நீட்டிக்கக் கோரிக்கை
மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீடு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் வழங்கப்படாது. சில மாநிலங்கள் கால அவகாசம் கோரியும், இழப்பீட்டு காலத்தையும் நீட்டிக்கக் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு தொடர்ந்து எதிர்க்கிறது. இதற்கான இறுதி முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் அடுத்த வாரம் கூடுகிறது.
GST compensation cess extended till March 2026; is not for states: Finance Ministry
GST compensation cess extended till March 2026; is not for states: Finance Ministry ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் மார்ச் 20226 வரை நீட்டிப்பு..!