ஜூன் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜூலை 1 முதல் பற்பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதில் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது நாம் அனுதினமும் பயன்படுத்தி வரும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது தான்.
வரும் ஜூலை 1 முதல் நாடு பாலிஸ்டிரீன் மற்றும் எக்ஸ்பேண்டட் பாலிஸ்டிரீன் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், இறக்குமதி, விற்பனை என அனைத்திற்கும் மத்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் சுற்று சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பொருட்களாக மாறி வருகின்றன. இது பெரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக மண்ணில் மக்கி அழியாமல் காலத்திற்கும் அப்படியே இருந்து வருகின்றன.
ஜூலை 1 முதல் தடை
ஏற்கனவே பல வருடங்களாக இதனை தடை செய்ய மத்திய மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் வரும் ஜூலை 1 முதல் கட்டாயம் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கிள் யூஸ் அல்லது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்றால் என்ன? இதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்? இதனால் யாருக்கு எல்லாம் பாதிப்பு, என்ன பலன்.
1 முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு எரியும் பொருட்கள்
அனுதினமும் நாம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள். ஒரு முறை மட்டும் பயன்படுத்தி விட்டு, தூக்கி எரியும் கவர்கள், இதனை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை மீண்டும் மறுசுழற்சியும் செய்ய முடியாது. பெரும்பாலும் நகர்புறங்களின் வெளிப்பகுதிகளில் குவியலாக ஆங்காங்கே குவிந்து கிடப்பது, குப்ளைகளில் பல வருடங்களாக சேர்த்து வைக்கப்பட்டு, தேங்கிக் கிடப்பது என பிரச்சனைகள் அடங்கும்.
மறுசுழற்சி முடியாத பொருட்கள்
ஒவ்வொரு ஆண்டும் உலகில் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த கழிவுகளில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாது என்பது தான் கவலையளிக்கும் விஷயமே. உலகில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் மூன்றில் ஒரு பங்கு, மறுசுழற்சி செய்யாத பிளாஸ்டிக்குகளே.
என்ன பொருள்?
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளே உற்பத்தி துறை, டிஸ்டிரிபியூசன், பலூன் ஸ்டிக்ஸ், கப்கள், ஃபோர்க்ஸ், கத்திகள், ட்ரோக்கள், பிளாஸ்டிக் இயர்பட்ஸ், பிளாஸ்டிக் ஸ்ரேப்பர், கேண்டி மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ், இன்விடேஷன் கார்ட்ஸ், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன், 100 மைக்ரானுக்கு கீழான பிவிசி பேனர்ஸ், ஸ்ட்ராக்கள், சிகரெட் பேக்ஸ் உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளது.
பிரச்சனை என்ன?
இந்த தடைக்கு மீறியும் பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What items will be banned from from July 1, 2022? What is the problem if the barrier is violated?
A number of changes will take effect from July 1. Of particular note is the ban on plastics, which we use only once a day.