உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாகவும், ஆட்டோமொபைல் துறையிக்கு ஹாப் ஆகவும் விளங்கும் ஜெர்மனி நாட்டில் ரஷ்யா – உக்ரைன் போர்-க்கு பின்பு எரிபொருளில் துவங்கி உணவு பொருட்கள் வரையில் அனைத்து நுகர்வோர் பிரிவுகளிலும் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் எரிசக்தி நெருக்கடியானது தற்போது மக்களுக்கு இயற்கை எரிவாயுவை ரேஷனிங் அதாவது அளந்து அளந்து கொடுக்க வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளதால், விரைவில் ஜெர்மனி நாட்டில் “லேமன் பிரதர்ஸ் விளைவு” தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
ரஷ்யா வேண்டாம்.. வெளியேறும் அமெரிக்க காலணி நிறுவனம்.. என்ன காரணம்?
ஜெர்மனி
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி, உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா நாட்டுடன் ஆன விநியோகத்தைக் குறைத்த பின்னர், எரிபொருளில் தொடர்ந்து தட்டுப்பாடும், பிரச்சனைகளும் இருந்தது.
3ஆம் நிலை அவசரக்கால எரிவாயு திட்டம்
இந்நிலையில் ஜெர்மனி வியாழக்கிழமை அதன் 3ஆம் நிலை அவசரக்கால எரிவாயு திட்டத்தில் இரண்டாவது கட்டத்திற்கு நகர்ந்தது எனர்ஜி நெருக்கடி பற்றிய கவலைகளை அதிகரித்துள்ளது எண தெரிவித்துள்ளது.இந்த எரிபொருள் விநியோக அச்சங்கள் மூலம் ஐரோப்பிய இயற்கை எரிவாயு பியூச்சர்ஸ்-ஐ கடந்த ஆண்டை காட்டிலும் 85% உயர்த்தியுள்ளன.
விலை பாதிப்பு
ஜெர்மனியின் அவசரக்கால எரிவாயு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், எரிபொருள் நிறுவனங்கள் அதன் விலை பாதிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப அரசு கொள்கை இடம் கொடுக்கிறது. இதனால் ரீடைல் சந்தையில் மின்சாரம் முதல் பெட்ரோல், டீசல் என அனைத்து எரிபொருள் விலையும் அதிகரிக்கும்.
தற்காலிக முடிவு
இந்து ஜெர்மனி நாட்டின் பொருளாதாரத்திற்கும், வர்த்தகத்திற்கும் பெரும் பாதிப்பை அளிக்கும் என்பதால் அந்நாட்டு அரசு விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் விதிமுறையைத் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
எனர்ஜி சப்ளையர்கள்
மொத்த விற்பனை சந்தையில் மின்சாரத்தை வாங்கும் எனர்ஜி சப்ளையர்கள் தற்போது அதிகப்படியான நஷ்டத்தில் இயங்குவதால், தொடர்ந்து விலையைக் கட்டுப்படுத்தினால் இறுதியில் பெரும் தோல்வியடையும் என்பது தான் அடிப்படை அச்சம்.
ராபர்ட் ஹேபெக்
இந்த மைனஸ் மிகப் பெரியதாகிவிட்டால், ஜெர்மனி அரசால் பொருளாதார வீழ்ச்சியைச் சுமக்க முடியாது, முழுச் சந்தையும் ஒரு கட்டத்தில் சரிந்துவிடும் அபாயம் உள்ளது – எனவே எரிசக்தி அமைப்பில் ஒரு லேமன் பிரதர்ஸ் விளைவு உருவாக அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என்று ஜெர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் கூறியுள்ளார்.
ரெசிஷன்
ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதாரம் பணவீக்க பாதிப்பால் ரெசிஷன் பாதிப்புக்குள் நுழையக் காத்திருக்கும் நிலையில் ஜெர்மனி நாட்டின் யூடிலிட்டி துறையில் உருவாகியிருக்கும் லேமன் பிரதர்ஸ் விளைவு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
Germany energy crisis may trigger Lehman brothers effect
Germany energy crisis may trigger Lehman brothers effect ஜெர்மனி-யை துரத்தும் லேமன் பிரதர்ஸ் பிரச்சனை.. திவாலாகி விடுமா..?