தன் நெருங்கிய நண்பனுக்கும், தன் முன்னாள் மனைவிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாக தவறாக சந்தேகித்த பிரித்தானியர் ஒருவர், தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இங்கிலாந்திலுள்ள Oldham என்ற இடத்தில் வாழ்ந்து வந்த Tamby Dowling (36) என்ற பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த அவரது முன்னாள் கணவரான Abid Mahmood (35), Tambyயை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் தான் கையுடன் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியை எடுத்து, எட்டு முறை Tambyயைக் குத்தியிருக்கிறார் Mahmood. பின்னர் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் பொலிசில் சரணடைந்த Mahmood, மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசாரும் மருத்துவ உதவிக் குழுவினரும் Tambyயைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவர்.
இதற்கிடையில், சில வாரங்களுக்கு முன், மன நல சிகிச்சை பெறும்போது, தன் மனைவிக்கு, தன் சகோதரருடனும் தன் நெருங்கிய நண்பனுடனும் தவறான உறவு இருப்பதாக மன நல மருத்துவர்களிடம் கூறியுள்ளார் Mahmood.
அடுத்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. Mahmoodஇன் மன நிலை சீராக உள்ளது என கருதப்படும் நிலையில், அவர் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.